Monday, July 19, 2010

ஜனனித்தது உன்னால்




ஒவ்வொரு வார்த்தையும்
ஜனனித்தது உன்னால்
மொழியாகும்போழுது

உன்னோடு பேசாத
ஒவ்வொரு வார்த்தையும்
கருவறை குழந்தையாகவே
என்னுள் வளர்கின்றது

பாறையின்மேல் பெய்துசெல்லும்
மழைத்துளிபோல பயனற்று
மடிகின்றேன், பசுமையில்லாமல்

உயிர்க்குளிகூட வற்றிப்போனது
உன்பார்வை, உன்வார்த்தை,
உன்வருகை, உதயமில்லாதபோது

பிரபுமுருகன்............

உதிராதவரை




உன் வார்த்தைகள்
உதிராதவரை என்னுள் -
இலையுதிர்காலம்தான்

பிரபுமுருகன்........

Wednesday, July 14, 2010

அவள் உருவம்



எப்பொழுதும்
சிரித்துக்கொண்டே
இருப்பவள் அவள்.......

பைத்தியம் போல
என் மனசு........

பிரபுமுருகன்........

கண்ணாடி பிம்பம்


உன்னை உன்னால்
காணமுடியாது என்னுள்
உன்னை கண்டுகொள்

நீ சிரிப்பதை, உன் அழகை,
உன் அழுகையை,
நீ பார்த்ததில்லை என்னுள்
காட்டுகிறேன்

உன்னை என்னுள்
வைக்கதெரிந்தவன்
என்னுயிரை உன்கையில்
வைத்துவிட்டேன்

உன்கை தவறவிடாதே!
உடைந்துபோகும் என் உயிர்,

உடைந்தாலும் உயிர்காட்டும்
என்செல்கலேல்லாம்
உணதுபிம்பமாய்

பிரபுமுருகன்.............

பலாத்காரம்



பூக்கள் விரும்பாமலே
தேன் குடிதுச்செல்லும் -
கருவண்டுகள்

பிரபுமுருகன்........

Friday, July 9, 2010

ஆநிரை கூட்டம் கூட அழகுதான்

பெண் அழகானவளா
ஏன் புகழ்கின்றது
ஆண்மை பெண்ணவளை

கவிதைகள் பொய்களை
விதைக்கின்றது

உண்மையை
அருவடைசெயகிறது

ஆம்

பெண்மை இயற்கையோடு
ஒப்பீடு தான், கவிதை அழகு

என்று தெரிந்தவன் கவிஞன்
பெண் அழகல்ல தனித்து

இலையுதிர் காலம் கூட
மரநிழல் அழகுதான்

மாலை நேரத்து மஞ்சள்
வெயில் அழகுதான்

அலை அலையாய் கரை
தழுவிடும் கடல் அழகுதான்

உச்சி மலையில் ஒழுகிடும்
அருவி அழகுதான்

நெளிந்து வளைந்து ஓடிடும்
நதிநீர் அழகுதான்

கண்ணுக்குள் சிக்காத
தென்றல் அழகுதான்

கார்முகில் கலைத்திடும்
கதிர் ஒளி அழகுதான்

மார்கழி பொழிந்திடும்
பனித்துளி அழகுதான்

கார்த்திகை தூறிடும்
மழைச்சாரலும் அழகுதான்

பச்சை வயல்வெளி
வரப்புகள் அழகுதான்

இயற்க்கை அழகுதான்
அதற்க்கு இணையில்லை
ஒன்றும்தான்

பெண்ணை, இயற்கையோடு
ஒப்பிடாதே

ஆண்மையே! அறிவிழந்து
புகழாதே

போர்த்திடும் ஆடையும்
பூசிடும் முகச்சாயமும்
இல்லையெனில்

ஆநிரை கூட்டம் கூட
அழகுதான்


நட்புக்குள் நாம்



பாலினம் மாற்றிக்கொண்டோம்
வார்த்தைகளில்
டேய் என்றேன் உன்னை
டீ என்றாய் என்னை

பெற்றோர் இட்ட பெயர்
ஓன்று
தோழி வைக்கின்றாய்
தினம் ஓன்று

மாடு ஆடு, கோழி குருவி,
பாம்பு பல்லி,
இத்தனை அழகாய் பெயர்கள்
சூட்டுவதில் நிகரிலார்

பேசிய வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருக்கிறோம்
பேசாத நிமிடங்களில்
நலம் விசாரிக்கின்றோம்

என் வீடு வாசல் தோட்டம்வரை
நலம் விசாரித்தவள்

ஒருவரிச் செய்தியைக்கூட
உள்ளம் தாங்காதவள்
உடன் அனுப்பிவைப்பால்
பிடிக்கவில்லையா என்று

பிடித்த உணவு முதல்
பிடிக்காத உறவுக்காரர்வரை
சொல்லிவிட்டோம்

கவிதை எழுதச்சொல்லி
மகிழ்கின்றாய் உனக்காய்
கவிதை எழுத உயிர்வரை
யோசித்துவிட்டேன்

உன்வார்த்தைகள் போலவே
உன்விருப்பங்களும்
ஐஸ்கிரீம் சாக்லெட்டாய்
இனிக்கின்றது

அன்பு பாராட்டுவதில்
அன்னையை மிஞ்சிவிட்டாய்
அறிவு ஒழுக்கம் புகட்டுவதில்
தந்தையை மிஞ்சிவிட்டாய்

நீ என் தோழியாய்
தோழனாய் நிழலாய்
நினைவாய்
ஓடிக்கொண்டிருக்கின்றாய்
என்னுள்

பிரபுமுருகன்..................

ஒரு கவிதை எழுத உயிர் வடிப்பேன்



பாலைவன நடைபாதையில்
பயணக் களைபபாற்றும்
பசுமை நிழல் நீ

என் தனிமை இருள் போக்கி
உள்ள மகிழ் விளக்கேற்றி
புத்துலகம் காட்டியவள் நீ

என் உறவுகள் தனித்திருக்க
உயிர்வரை வெறுத்து நிற்க
நட்புறவாய் நகம்சதை நீ

நீலக் கடலுக்குள் தத்தளிக்கும்
என் மனதை கட்டுமரமாய்
வந்தெனை கரைசெர்தவள் நீ

ரோஜா இலை மறைவில்
முள்ளாய் அமர்ந்து
உயிர்காப்பவள் நீ

நீ அத்திப்பூ என்பதா இல்லை
அரளிப்பூ என்பதா இல்லை
குறிஞ்சிப்பூ என்பதா
இல்லை இல்லை

நட்பு நட்பு என்று என்றென்றும்
பூத்து குளுங்கவேண்டும்

உனக்காய் ஒரு கவிதை
எழுத உயிர்வடித்து
உயிர்வாழ்வேன் எழுத்துக்களாய்

பிரபுமுருகன்........

மழைவரும் நேரம்



உள்ளம் மகிழ்ந்திடும்
உயிர்சுகம் தந்திடும்
தென்றல் ஏந்திவரும்
மண்வாசம்

இலைதழை ஆடிடும்
இடம்பொருள் தேடிடும்
உயிர்வகை ஆயிரம்

கார்முகில் இறக்கம் கான
கனரிடும் கர்ப்பிணி போல
கதறிடும் இடிமின்னலாய்

அவசரமாய் அக்கறைகொண்டு
தரிசனமாய் கூரையில் நின்று
போர்த்துகிறான் வைகூலங்கள்
கொண்டு

ஒருதுளி மழைத்துளி
உடைத்தெழும் உயிர்த்துளி
வான் நோக்கும் உழவன்
விதைத்து வந்த விதைகளை
நம்பி

முத்துப்போல ஒரு துளி
மழைத்துளி சிதறி விழும்
நிலமகளின் உயிர்த்துளி

பிரபுமுருகன்
.............

பாசமான மீசைக்காரன்



முறுக்கு மீசைமேல்

முகம் பதிக்கும்

என் உயிரே! சிணுங்கி

முகம் சுளிக்கும் கணம்

தாளாது உனக்காய் வழித்து

வழக்கொளிந்தேன்

நீ என் வாழ்க்கையடி கண்ணே!

பிரபுமுருகன்.....

எனக்குள் விளைந்தவை



வெண்மேகம் கருத்தால் தான்
விளை நிலம் பசுமையாகும்

உடம்பு பெருத்து ஆவதென்ன
உழைக்க மனம் வருந்தும்போது

உடனிருந்து பயனில்லை தோழன்
தோள்கொடுக்க மறந்தபோது

Monday, June 28, 2010

நாவடக்கம்

எலும்பில்லாத நாக்கு
எதையும் சொல்லும்
எப்படியும் சொல்லும்

உண்மை சொல்லிப்பார்
உன் உள்ளம் மகிழும்

போய் கூரும்முன்னே
நாவே உலரும்

வார்த்தைகளின் உருவங்களாய்
நாவின் நளினம்

சுவைகளின் நிறங்களாய்
நாவின் பயணம்

நாவு நீலக் கூடாதென்பதே
அடக்கமாய் உள்ளமர்வு

நாவு அடக்கம் பெற்றால்
நல்லொழுக்கம் உயர்வு பெரும்

நல்லொழுக்கமே நற்ப்பெயரை
விதைக்கும்

வள்ளுவன் பாடிவைத்த வைர
வரிகளாய்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Friday, June 25, 2010

போர்க்களம்



போர்க்களம்
என்னவளின் இதழால் மலரினுள்

பாதஅடியினால் மண்துகள்களுக்குள்

கூந்தளினால் பட்டுபூச்சிகளுகுள்

அவள்வாசனையால் பூக்களுக்குள்

இடைஅழகால் அன்னபறவைகுள்

உடல்நிறதினால் செர்ரிபழத்தினுள்

பார்வைகளால் என்கண்களுக்குள்

என்னவளினால் இதயத்தினுள் மூண்டது
=====>> போர்

Monday, June 21, 2010

ஹைகூ கவிதை





தன் உணவிற்காக (சுயநலம்)
பாவம் கர்ப்பிணி கழுத்தில் கூட கவட்டை
குழை தள்ளிய வாழை மரம்



நாங்கள் தொட்டாலும் சுருங்குகிறாய்
காற்று பட்டாலும் சுருங்குகிறாய்
நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா ?
தொட்டாசுருங்கி செடி

Friday, June 18, 2010

மனைவி




பரந்துவிரிந்த உலகத்தில் உள்ள
சூரியன் நிலவுபோல வாழும்

மன சிந்தனையில் உள்ள
பசுமையான நினைவில் வாழும்

நேசத்திற்கு முகவரியாய் உள்ள
பாசத்திற்கு உரியவளாய் வாழும்

கண் கருவிழிகளில் உள்ள
விழித்திரையின் ஒளியாய் வாழும்


உன்னதமலர் தான் என் ----- மனைவி

Friday, June 11, 2010

அதிசய மலர்



















ரோஜாவின்
இரண்டு இதழ்
புன்னகையில் மலர்ந்து
வார்த்தைகளில்
மனம்வீசுகிறாள்.

பிரபுமுருகன்........

Thursday, June 10, 2010

மாண்புமிகு மனிதன்






உருவமில்லாமல் உறங்கியது
கல்லுக்குள் தெய்வம்,
உளி கொண்டு உறக்கம்
கலைத்து, விழி கொண்டு
வீரம் புகட்டி, பெயர்கொண்டு
பெருமை தந்து, நிலையென்று
நிறுத்திவைத்தான்,
காவல்தெய்வமாய்.

பிரபுமுருகன்.........

வழியெங்கும் விழி சிந்தி


















சின்ன சின்ன நீர்த் திவலையை

பூவிதழ் சிந்தும் பனித்துளியை

பருகிக் களிக்கும் கதிரவன் விழி-போல

பெண்ணே! உன் இதழ் சிந்தும்

புன்னகை பருக வழியெங்கும் விழி

வைத்து நிற்கிறேன்.

பிரபுமுருகன்.............

உன்னை தேடி தேடி






இரவும் பகலும்
உனை தேடி தேடி
என் இதய ஓட்டம்
நின்றதடிப் பெண்ணே!

பிரபுமுருகன்......

எச்சப்படுதுவது யார்






சிலைமீது எச்சமிடும்
பறவைக்கு தெரிவதில்லை
தேசப்பற்று தலைவரென்று

சாதியின் பெயரைச்சொல்லி
எச்சில் படுத்தும் மனிதர்க்கூட்டம்
தெரிந்தே தேசம் போற்றும்
தலைவரென்று

பிரபுமுருகன்........

குடிமகனே குடியாதே







குடி தினம் தண்ணீரை குடி
தூய்மையாகும் சிறுநீரக பணி

வியர்வைத்துளிகளை சிந்தி
குடிக்கின்றாய் கொஞ்சம் சிந்தி

மது குடித்தால் உடல் கெடும்
தினம் குடித்தால் உயிர் விடும்

மதுவில் இருப்பது எரிசாராயம்
குடல் எரிப்பதே அதன் தோராயம்

அன்புக்காய் கற்றுக்கொண்டால்
அடிமையாய் சிக்கிக்கொல்வாய்

தள்ளாடி தள்ளாடி தடுமாறி நீ வீடுவர
உள்ளக்காயங்கலோடு உன்மனைவி

மது அருந்திச் செல்லும் குவளையை
மகன் கழுவிச்சுவைதிடும் திவலைகள்

நீ குடிமகன் என்பதால் குடிக்கின்றாயோ
குடியானவள் குடித்தால் பெண்ணாகுமோ

எதை மறக்க நீ குடிக்கின்றாய் மது, மாது
உன்னை நினைந்தே கண்ணீர் வடிக்கின்றாள்

வீதியில் விழுந்துகிடப்பது நீ மட்டுமில்லை
உன்குடும்பத்தொடு தலைநிமிர முடியாமல்

பிரபுமுருகன்............

கோபம்





உனது எனது
கண்களை மட்டும்
மறைக்கவில்லை
நம் கால்களையும்
வாரிக்கொண்டது

உனக்காய் எனக்காய்
எல்லாம் கொடுக்க
நினைத்த மனசு ஏனோ
விட்டுக்கொடுக்க
மறந்தது

எங்கிருந்தது கோபம்
உன்னோடு சிரிக்க
உன்னோடு பழக
உன்னோடு வாழ
நினைக்கும்பொழுது

கோபம் எனக்காய் கொடுத்தது
உன்பிரிவையும் - வெறுமை
நினைப்பையும்

கோபத்தால்
தினம் வதைபடும் மனம்


பிரபுமுருகன்................

எந்த தொடர்பும் இல்லை




என் கண்களும் உன் கண்களும்
மோதவில்லை

என்சுவசமும் உன்சுவசமும்
மெய் தீண்டவில்லை

என் கைகளும் உன்கைகளும்
பற்றிக்கொள்ளவில்லை

என் உடலும் உன் உடலும்
சந்திக்கவில்லை

என் இரவில் நீ கனவில்
வருவதில்லை

எந்த தொடர்பும் இல்லாமல்
தட்டச்சில் என் இதயம்
தவிக்கவிடுகின்றாய்

எழுத்துக்களில் உண்முகங்களை
பதித்துவைத்து

தீண்டலாய் திருடலாய்
அனுப்பிவைத்தாய்.

பிரபுமுருகன்.........

Monday, June 7, 2010

சிரம் உன்மடியில்






சிறகடித்து திரிந்தவனை உன்

சிந்தையில் ஆழ்த்திவிட்டு

சிற்ப்பங்கள் வடித்தவனை

சிலையாய் நிற்க வைத்து

சிர்ப்பிக்குள் முத்தை போல ௦

சித்தத்தில் நுழைந்தவளே

சிகரத்தில் ஏற்ற என்னை

சீர்துக்கி வளர்த்தவளே

சின்ன இதழ் பேச்சால் என்

சிரம் உன்மடியில்..................

Thursday, May 13, 2010

ஏன்டா என்னை கொள்கிறாய்



ஏன்டா என்னை கொள்கிறாய்

மலரின் மொட்டை மெல்ல மோதி
திறக்கும் தென்றலா நீ
மலர்ந்த மலரை வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சியா நீ

ஏன்டா என்னை கொள்கிறாய்

தனிமையிலே என் நெஞ்சம்
வருடிவிடும் தென்றலா நீ
பாறையிலே சுரக்கும் நீரூற்றா நீ
எனக்குள்ளே சுரந்து வழிகிராயே

ஏன்டா என்னை கொள்கிறாய்

குறும்பு பார்வை அரும்பு மீசைகாட்டி
உன்னையே நினைக்கச்செய்கிராயே நீ
சிறு சிறு பொய்களை சொல்லி
என் உள்ளக்கதவினை திறக்கச்செயகிறாய் நீ

ஏன்டா என்னை கொள்கிறாய்

காற்றின் விசையோடு போராடும்
இலைபோல
உன்பார்வை கணையோடு போராடும்
என் உயிர்போல
உன்கவிதை இன்னும் என்னை
கொள்ளாமல் கொல்லுதடி

பிரபுமுருகன்.......

காதலின் தீர்ப்பு



















என் காதலின் தீர்ப்பை
கண்ணுக்கு மையிட்டு
மௌனத்தில் எழுதுகிறாள்

பிரபுமுருகன்............

என்னுள் கலந்தால்



மான் போல மீன் போல துள்ளித்திரிந்தால்

மழை போல பணி போல என்னுள் விழுந்தால்

விதை போல மரம் போல நெஞ்சில் முளைத்தால்

பூப்போல புதுமழைபோல என்னுள் மனத்தால்

தேன்போல திணை போல நெஞ்சில் இனித்தால்

கனல் போல உலை போல நெஞ்சில் கொதித்தால்

ஊன்போல உயிர்போல என்னுள் கலந்தால்

பிரபுமுருகன்..............

போராட்டம்



மரத்தின் கிளையில்
இலையின் பிடியாட்டம்

கழுகின் பிடியில்
பாம்பின் உயிரோட்டம்

மெழுகின் திரியில்
வெளிச்சத்தின் நிழலாட்டம்

பிரபுமுருகன்........

மெழுகுவர்த்தி நாம்




நிகழ் காலத்தை தொலைத்துவிட்டு
எதிர்காலத்தை தேடுகின்றோம்

பாச வலைகளை முதுகில் சுமந்து ஆசை
வலைகளுக்குள் அகப்பட்டுவிட்டோம்

அன்னை தந்தை தம்பி தங்கை முகங்களை
படங்களை பார்த்து புன்னகை புரிகிறோம்

புது புது உறவுகள் முளைத்துவிட்டன
கார்மேகமாய் மனம் கருத்துபோனத்தில்

தந்தை கொஞ்சும் மீசை முத்தம்
அந்த பிஞ்சு முகத்தில் பதியவில்லை
அந்த செல்போனுக்கு புரிந்தது

பல வருடங்கள் கழித்துவரும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் அன்னை உள்ளம்

மாமா என்று சொல்லும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் மனைவியின் உள்ளம்

உறவுகள் கூடி புதுமையாய் பார்க்கும் நம்மை
மாற்றம் நம் உடம்பில் மட்டும்மல்ல
நம் வாழ்க்கையிலும்.

பிரபுமுருகன்............

தாய் இவள்








கணவனோடு கைச்சண்டை
கண்ணீரோடு கைக்குழந்தை

அழுகின்றாள் குழந்தை
தாயின் கண்ணீரை கண்டுதான்
அலுதவலாய்

சிறிது ஒப்பந்த போர்நிறுத்தம்
குழந்தையின் தலையீட்டால்

கண்ணீரை தான் துடைத்து
கணவனின் கால் பட்ட மார்பை
குழந்தையின் வாய் பட்டு சுரக்கின்றாள்
தாய் பாலையும், கண்ணீரையும்

பிரபுமுருகன்..............

இறைவன் தந்த பரிசு










உளிகொண்டு உருவம் தந்த
சிறப்பிக்கு இறைவன் தந்த
பரிசு சிறப்பு அர்ச்சனை சீட்டு

பிரபுமுருகன்................

கண்டதும் காதல்

















நொடியில் விழுந்தது
கண்ணில் முளைத்தது
முழுநினைவாய்
வளர்ந்தது
கனவுப் பூக்களாய்
பூத்துக் குலுங்கி

காய்போல கனத்து
நின்றது
கனி என்று நினைத்து
நின்றேன்
காற்றோடு வெடித்துச்
சென்றது
இலவம்பஞ்சுபோல
வெறுமையான
இதயக்கனி

பிரபுமுருகன்........

புதுமைப்பெண்கள்
























விபச்சாரம் நடத்த
அரசின் அங்கீகாரம்
கேட்கின்றார்கள்.

உடை நாகரீகம்
என்று
அடையாளங்களை
மூடி நடை பழகும்
அழகிகள்

திரையில் வெளிச்சத்தில்
அந்தரங்கம் காட்டவரும்
நாயகிகள்

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள்
நடத்தவந்தோம்;

பாரதி சொன்ன
புதுமை பெண்களுள்
இவர்கள் எங்கே?

பிரபுமுருகன்.................

தனிமையும் பிரிவும்















அன்பில் துளையிட்டு
ஆனந்தம் கொண்டாடும்
கருவண்டு

உணர்வுக்கு தீயிட்டு
உள்ளத்தை கல்லாக்கும்
உள்நின்று

தனிமைக் கடலில்
நினைவலைகளில்
தத்தளிக்கும் மனது

சூரியன் இல்லா
பகல் போல
நிலவு இல்லா
இரவு போல
பிரிவும் தனிமையும்

பிரபுமுருகன்............

மரணம்




சாதி மொழி மதம்
கடந்த உயிர்களின்
சங்கமம் மரணம்

பணம் பொருள் செல்வம்
நுழையாத உலகம்தேடிய
பயணத்தின் நுழைவாயில்

வலி வேதனை நினைவு
மறந்த உன்னத நிலை
மரணத்தின் அரவணைப்பில்

அன்பின் எல்லையை தாண்டிய
உடல் தேவையினை கலைந்த
உயிர்களின் நிலை

நிலமகளின் வயிற்ருக்குள்
கருவறை குழந்தைகளாய்
இன்னொரு ஜனனத்தை தேடி...

பிரபுமுருகன்.............

Saturday, May 8, 2010

பெண்ணில் சரிபாதி ஆண்














மாதர் என்றார், மடமையர்
அழிந்தார்
மங்கையர் என்றும் தரணியில்
உயர்ந்தார்

காதலில் தன்னுள் பாதி
என்றார், சட்ட ரீதியில்
அதை கொடுத்திட மறுத்தார்

வீரம் என்பது ஆண்மை அல்ல,
கோலை எனபது பெண்மையும்
அல்ல

இன்பத்தில் பங்கு கொண்ட
ஆண்மை,பேறின் வலிகளை
உணரமருப்பது ஏனோ

பெற்று எடுத்தவள் அன்னை
பேரின் முதல் பெயர் தந்தை

ஆண் ஆதிக்கம் அடங்கி போனது
அம்மாவின் பெயரும்
முதலும் ஆனது

பூமிமை தாய்யேன்கிறாய் ஆனால்
அவளை மிதித்து நடக்கவே
எண்ணுகிறாய்

ஆணில் சரிபாதி பெண் என்பதை
இறைவன் வகுத்தான், அதை
வெறும் சித்திரமாய்
ரசிக்க எண்ணுகிறான்
அறிவுக்கண் திறக்கதவன்

நிலாவைக்காட்டி சோறு ஊட்டிய
பெண், நிலவில் கால்பதிக்க
வளர்ந்துவிட்டால்

ஏற்றுக்கொள் ஆண்மையே
ஆண்மைக்குள்ளும் பெண்மை
உண்டு
பெண்மைக்குள்ளும் ஆண்மை
உண்டு

என்பதை உணர்ந்து நிறைவேற்று
சட்டம் பெண்ணில் சரிபாதி
ஆண் என்று...................

பிரபுமுருகன்.....................

மலரோடு காதல் ஒப்பீடு






செடிவளர அரும்புவந்தது

என்வயதுவளர இளமைவந்தது,

தென்றல் மோதிட மொட்டு மலர்ந்தது

அவள் கண்கள் மோதிட காதல் மலர்ந்தது,

மலர் கொடுத்தது தேனும்
மனமும்
என்காதல் தந்தது இன்பமும்
துன்பமும்,

மலர்
வாடிப்போனது பலர் காணும்பொழுது
மலர்ந்துவிடுவது காணாபொழுது,

காதல்
வாடிப்போனது அவளை காணாபொழுது
மலர்ந்துவிடுவது காணும்பொழுது,

மலர்ந்துவிட்ட மலர் மங்கையின்
கூந்தலை அடைந்தது,

சொல்லிவிட்ட காதல் பெண்ணவள்
இதயத்துள் நுழைந்தது,

ஒரு செடியில் பல பூக்கள்
பூக்கலாம்
ஆனால்
என் காதல் பூத்தது
ஒருமுறைதான்.....

பிரபுமுருகன்.....................

இசை




இசை
ஒவ்வொரு உயிரிலும்,
ஒவ்வொரு விசையிலும்,
ஒவ்வொரு படைப்பிலும்.

ம்மாவின் தாலாட்டில் இசைந்தாடும்
தூளிக் காற்றில் மயங்காத மழலை
உண்டோ.

லையத்தின் கூட்டில் ஆராதனை
பாட்டில் உருகாதோ மானிடநெஞ்சம்.

லைமீது தென்றல் மோதி இளைப்பாறும்
நெஞ்சம் கோடி உறங்காதோ நிழலைத்தேடி.

மத்தின் சாமத்தில், ஓலமிடும்
நேரத்தில், மிரட்டாதோ உடுக்கையின்
தாளம்,

ரல் மீது உலக்கை குத்தி,
தொடர்ந்துவரும் மங்கையின்
சுதி, ஒதுங்காதோ உரலுக்குள் உமி.

டல் கொள்ளும் ஆண்மையின் வீரம்,
அலைபாயும் பெண்மையின் கானம்,
அடங்காதோ சாமத்தில் காமம்.

ன்னவள் மௌனம் கொள்ள, என் இதயம் வெளியில் துள்ள,
இசைக்காதோ அவள் காதினில் மெல்ல

ற்றம் போடும் காளைச் சலங்கை,
இரைந்து செல்லும் வாய்க்கால் வழிச்சாலை, தலை அசைக்காதோ
வளர்ந்திடும் சோலை.

ந்தும் இணைந்தது பைந்தமிழ் இலக்கியம், உலகின் மகிழ்ச்சியோ
இயல் இசை நாடக தீபம்.

ன்றாய் கலந்திடும் மேகம், மொழிந்தாலோ
இடிஎன்னும் கானம், கனிந்தாலோ
மழையெனும் காமம்.

யாது அலைகடல் அலை, உறவாடும்
கரையோடு தினம், களவாடும் காண்பவர் மனம்.

ஒளவையின் தேன்தமிழ் சொற்கள்
முழங்காதோ இன்னும் பல ஆயிரம்
ஆண்டுகள்.

பிரபுமுருகன்.....................

காதல் பண்பலை



காதல்
உணர்வுகளால் எழுப்பப்படும்
பண்பலை

இதய துடிப்புகள்
இசைகலாய் ஒலிக்க

மௌனம் கவிதைகளாய்
கண்களில் மொழிபெயர்க்கும்

தேன்போல காதல்,
சுவைப்பதற்கு சில
தேனீக்களில் தீண்டல்கள்
தாங்கிக்கொள்.

பூப்போல காதல்
மென்மையானது,
அழகானது,
அதன் செடியைப்போல்
பிரிவையும் ஏற்றுக்கொள்.

தென்றல் போல காதல்
உள்ளம் வருடிச்செல்லும்,
தென்றல் புயலாக வரும்பொழுது
இலைபோல எதிர்த்து நில்.

ஒற்றை நிலவாய் காதல்
உலாவரும் இரவுகள்
ஒளிமயமானது, ஓர் நாள்
நிலவில்லா தனிமையையும்
தாங்கிகொள்.

உன்காதல்
மணமாழைகளாய்
பௌர்ணமி நிலவொளியில்
தேன்குடிக்கும்.

பிரபுமுருகன்.................


பச்சை குடைபிடிக்கும்
ஒருவழிச்சாலை

காலை மணி ஒலிக்கும்
மார்கழிவேளை

ஊரார் கூப்பி நிற்கும்
விநாயகர் ஆராதனை
கூட்டமாய் குளிர்காயும்
சொக்கப்பன் ஓலை

குமரிப்பெண்ணின் அதிகாலை
கோலங்கள்

கலப்பையோடு வயல்வெளியில்
உழவன்

வரப்புகளில் வழிந்தொழுகும்
பனித்துளிகள்

ஆதி மனிதனாய் கண்மாய்
குளியல்

ஆலமரத்தின் விழுதில்
ஊஞ்சல் ஆட்டம்

தொலைதூர பள்ளியின்
நடைபயணம்

காத்திருக்கும் விடுமுறை
காலம்

உயர்ந்து நிற்கும்
பனைமரக்கூட்டம்

அடை மழையில்
குடைபிடிக்கும் கோணிப்பை

ஊர்நடுவே ஓடிவரும்
மழைநீர் வெள்ளம்போல்

அரபிக் கடல் கொடுத்த

வியர்வை துளிகளை
பசுமை நினைவுகளால்

உலர்த்திக்கொள்கின்றேன்

அடுக்கு மாடி குடியிருப்பும்
அடைத்துவைத்த குளியலறையும்

கல் பதித்த நடைபாதையும்
கண்டுக்கண்டு கல்லாகிப்போன
எம்நெஞ்சை,

கிராமத்தின் பசுமை நினைவுகள்
கல்லுக்குள் நீர்போல கசிகின்றது.

பிரபுமுருகன்.......................







Tuesday, May 4, 2010

இருந்தும் இல்லை



சிலை இருந்தும் தெய்வம் இல்லை
கருவறையில் கலவியின்போது

தாயிருந்தும் அன்பு இல்லை
கள்ளக்காதளுடன் மகனை கொன்றபோது

இதயம் இருந்தும் காணவில்லை
அவளை பார்த்த பொழுது

பூக்கள் இருந்தும் வாசம் இல்லை
அவள் என்னிடம்

பிரபுமுருகன்.....................

வழிப்பயணம்




என் கண்களிலேனடி வந்துவிளுந்தாய்
என் இளமை பிம்பம் காணத்துடிக்குது
வார்த்தையில் என்னடி மந்திரம் வைத்தாய்
என்னை நானே மறந்து போனது
அழகாய்யேனடி புன்னகைசெய்தாய்
உள்ளக்குலிகள் காய்ந்து போனது
பாதி முகம் காட்டிச்சாய்ந்தாய்
போதை கொண்ட முகத்தை தந்தாய்
நிலவு முகம் காட்டி நின்னு
என்னை உந்தன் நிலலாக்கிக்கொண்டாய்
பாதி வழியில் நீ வந்து
முழு வலியை தந்து சென்றாய்.

பிரபுமுருகன்.....................

Sunday, May 2, 2010

தெய்வத்தின் புனிதம் கெடுத்தவன்



மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ
அவனை உன்னால்
பார்க்கமுடியவில்லை
என்பதற்காகவே

கல்லை உன்போல
வடிவம்தந்து
காகிதத்தில் அதுபோல
சித்திரம் வரைந்து

கடைகளிலும்
கடைத்தெருவிலும்
அவன் பெயர் சொல்லி
விற்று பிளைக்கிராயே

தெருவுக்கு தெருவு
ஆலையங்கள் கட்டுகிறாய்
அதையே மீண்டும் சாலைகள்
வருகின்றதென்று தகர்க்கின்றாய்

காவிகள் கட்டியவறெல்லாம்
சாமிகள் என்று புகழ் பாடுகிறாய்
காவிகள் வெளுத்ததும் அவனையே
போலிகள் என்று சூரையாடுகிறாய்

மனிதா
தெய்வத்தின் புனிதம்
கெடுத்தவன் நீ

இந்த பிரபஞ்சம் முழுவதும்
பறந்து கிடக்கின்றாவனை
ஒரு அறையில்
அடைத்துவிட முடியாது

சாணத்தை கையில் பிடித்து
வணங்கியவன் கண்ணுக்கு
கடவுளாக தெரிந்தவன்

பளிங்கு கற்க்களிலும்
வண்ண வண்ண விளக்குகளிலும்
வானுயர சிலைகளிலும்
கடவுள் காட்சி தருவானேன்பது
உன் மடமையே


பிரபுமுருகன்...............

பூவுக்கும் பூவைக்கும் ஒற்றுமை



பூக்கள் சிரித்தால் சருகாக உலரும்
பூவை சிரித்தாள் காதலாக மலரும்

பிரபுமுருகன்......

இன்று பூப்பெய்தவலாய்




வறட்சியின் பிடியில்
உயிர் விடும் நிலையில்
உன்னைக்கண்டேன்

சிறிது நீர் கொடுத்து
உன் முகம் கழுவி
அழைத்துவந்தேன்

தினமும் உன்னை
கவனிக்கிறேன் உன்
படர்ந்த மேனியின்
அழகைப்பார்த்து

நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் உன் அழகும்
என்னை கொள்ளை கொண்டது

இன்று என் வரவை பார்த்து
நாணம் கொண்டு நிற்கிறாள்
பூப்பெய்தவலாய் செம்பருத்தி ...


பிரபுமுருகன்...............

அவளும் என் தாய்தானே

தொப்புள் கொடி உறவுகள் அறுத்து
என் உயிர்கொடி நெஞ்சில் சுமந்தால்
அவள் என் உயிர்

அடுத்த பிறவியை என் கண்முன்னே
காட்டியதால் அவள் என் கடவுள்

அவள் மடியில் என்னைதாலாட்டியதால்
அவள் என் தாய்

Saturday, May 1, 2010

இறந்தும் வாழ்ந்தவள்




அழகை உடலாக
வண்ணமோ ஆடையாக
மென்மையோ இதழாக
மனமே கவர்ச்சியாக பிறந்தவள்

தெய்வ ஆராதனையாக
தேவியரின் கூந்தளுக்காக
மாய்ந்தவரின் அஞ்சலியாக
காதலின் சின்னமாக
மனங்களின் மாழையாக

தன் உயிர் அறுத்து
இரு உயிர் தொடுத்து
மடிந்துவிடும் மலராக
மனித மனம்வேண்டும்.

இதன் உட்கருத்து :

ஒருநாள் வாழ்க்கையில் மலர்
இத்தனை தியாகங்கள்(பலன்களை)
இறந்தபின் கொடுத்து செல்லும்பொழுது

ஆண்டுகள் பல வாழும் நம் உடல்
உறுப்புக்கள்
எத்தனை எத்தனை நன்மைகளை
கொடுத்துச் செல்லவேண்டும்

இறந்தபின் உடல் தானம் செய்வோம்
பல உயிர்களில் வாழ்ந்துநிர்ப்போம்

பிரபுமுருகன்...............

திகட்டாத உப்பு


உண்மை
உழைப்பில் வெளிவரும்
வெண்மை
அதை உண்டு சுவைப்பது
முதலாளிகள்
தன்மை.

பிரபுமுருகன்...............

வேதனை!



குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை

குழந்தை பிறக்காத தம்பதியின் வாழ்க்கை

வாழ்க்கை துணையில்லாத விதவை

விதவை செல்லமுடியாத திருமணம்

திருமணம் முடியாத கன்னிப்பெண்

கன்னிப்பெண் தொலைத்துவிட்ட கற்ப்பு

கற்ப்பு பற்றி கவலைப்படாத விபச்சாரி

விபச்சாரியின் வயிற்றில் பிறந்த குழந்தை

பிரபுமுருகன்............

வழக்கம்போல

பதறி எழுந்தேன் தூக்கத்தில், அச்சத்தில்
விடுமுறை தினமென்பதரியாமல்

பிரபுமுருகன்................

கனவு


கண்கள் உறங்கியவேளை
நினைவு பிம்பங்கள்
இறந்தகாலம் முதல்
எதிர்காலம் வரை
பயணிக்கும் நேரம்.

கண்திறந்த உலகத்தில்
கூலி நீ என்றாலும்
கண்மூடிய நேரத்தில்
கோமகனாய் நீவருவாய்

பள்ளி மாணவனாய் நீ இருந்தால்
மாநிலத்தில் முதல் மதிப்பெண்
நீ எடுக்க காண்பாய்

காதல் அரும்பு கட்டியவன்
நீ என்றால் காதலியின்
தலை சூடி மகிழ்வாய்

ஓர்நாள் உன்தாய் மடியில்
பிறக்க காண்பாய்
மறுநாள் உன்தாய் மடியில்
இறக்கவும் காண்பாய்
மரணத்தையும் ஜனனத்தையும்
காட்டும் நேரம்

சிறகுகள் இல்லா மனிதஉடல்
வானம்நோக்கி பறந்துசெல்லும்
ஏனோ கண்கள் விழித்ததினால்
கழுதையின் கானமகிப்போவதேங்கே

கனவு

பிரபுமுருகன்........

அவள் கண் விதுப்பழித்தல்


பட்டாம் பூச்சியின் இமை,
அவள் இமைத்தால்
அதில் உதிர்ந்தது என் மனசு

கூறிய வாளின் முனை அழுத்தம்
ஒரு பார்வை

உச்சி வெயிலில் உதிர்ந்திடும் பணி
மழையாய் ஒரு பார்வை

உள்ளக்குளிருக்குள்ளே கோடை
வெப்பமாய் ஒரு பார்வை

முகம் மூடிய உறைக்குள் கயிற்றின்
இறுக்கம் ஒரு பார்வை

அடிக்கின்ற காற்றில் வெடித்து விழும்
பஞ்சு போல ஒரு பார்வை

தூண்டில் முள்ளில் அகப்பட்ட மீன்
துள்ளலாய் ஒரு பார்வை

உதிர்ந்து விழும் பூ, நிலத்தின்
காயமாய் ஒரு பார்வை

முழு நிலவின் ஒளிவெள்ளமாய்
ஒரு பார்வை

உடைபட்ட கரையில் உருண்டோடும்
வெள்ளமாய் ஒரு பார்வை

பார்த்துக்கொடிருக்கின்றால்

பிரபுமுருகன்................

ஐந்தரிவானவன்

ஆட்டின்
தலை மீது தண்ணீரை ஊற்றி
தலை அசைக்கும் நேரத்தில்
வெட்டுகிறான் ஆறிலிருந்து
ஒரு அறிவை.

தனக்கு கைகள் இருக்கு என்கின்ற
ஆணவத்தால்.

பிரபுமுருகன்...................

தீண்டாமை




அழகிய பெண்ணொருத்தி
அரளிப்பூவை
ரசிக்காமல் செல்வது

அழகிய ரோஜாவையும் விதவை
கண்டும் காணமல் செல்வது

பிரபுமுருகன்...................