Monday, June 28, 2010

நாவடக்கம்

எலும்பில்லாத நாக்கு
எதையும் சொல்லும்
எப்படியும் சொல்லும்

உண்மை சொல்லிப்பார்
உன் உள்ளம் மகிழும்

போய் கூரும்முன்னே
நாவே உலரும்

வார்த்தைகளின் உருவங்களாய்
நாவின் நளினம்

சுவைகளின் நிறங்களாய்
நாவின் பயணம்

நாவு நீலக் கூடாதென்பதே
அடக்கமாய் உள்ளமர்வு

நாவு அடக்கம் பெற்றால்
நல்லொழுக்கம் உயர்வு பெரும்

நல்லொழுக்கமே நற்ப்பெயரை
விதைக்கும்

வள்ளுவன் பாடிவைத்த வைர
வரிகளாய்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

1 comment:

  1. அருமையான கவிதை உண்மையும்கூட. வாழ்த்துக்கள்..

    சின்னதிருத்தம்
    //போய் கூரும்முன்னே
    நாவே உலரும்//

    பொய் கூரும்முன்னே
    நாவே உலரும்

    இப்படி வருமென்று நினைக்கிறேன்.
    தவறாக இருப்பின் பொருந்திக்கொள்ளவும்..

    ReplyDelete