Monday, July 19, 2010

ஜனனித்தது உன்னால்




ஒவ்வொரு வார்த்தையும்
ஜனனித்தது உன்னால்
மொழியாகும்போழுது

உன்னோடு பேசாத
ஒவ்வொரு வார்த்தையும்
கருவறை குழந்தையாகவே
என்னுள் வளர்கின்றது

பாறையின்மேல் பெய்துசெல்லும்
மழைத்துளிபோல பயனற்று
மடிகின்றேன், பசுமையில்லாமல்

உயிர்க்குளிகூட வற்றிப்போனது
உன்பார்வை, உன்வார்த்தை,
உன்வருகை, உதயமில்லாதபோது

பிரபுமுருகன்............

உதிராதவரை




உன் வார்த்தைகள்
உதிராதவரை என்னுள் -
இலையுதிர்காலம்தான்

பிரபுமுருகன்........

Wednesday, July 14, 2010

அவள் உருவம்



எப்பொழுதும்
சிரித்துக்கொண்டே
இருப்பவள் அவள்.......

பைத்தியம் போல
என் மனசு........

பிரபுமுருகன்........

கண்ணாடி பிம்பம்


உன்னை உன்னால்
காணமுடியாது என்னுள்
உன்னை கண்டுகொள்

நீ சிரிப்பதை, உன் அழகை,
உன் அழுகையை,
நீ பார்த்ததில்லை என்னுள்
காட்டுகிறேன்

உன்னை என்னுள்
வைக்கதெரிந்தவன்
என்னுயிரை உன்கையில்
வைத்துவிட்டேன்

உன்கை தவறவிடாதே!
உடைந்துபோகும் என் உயிர்,

உடைந்தாலும் உயிர்காட்டும்
என்செல்கலேல்லாம்
உணதுபிம்பமாய்

பிரபுமுருகன்.............

பலாத்காரம்



பூக்கள் விரும்பாமலே
தேன் குடிதுச்செல்லும் -
கருவண்டுகள்

பிரபுமுருகன்........

Friday, July 9, 2010

ஆநிரை கூட்டம் கூட அழகுதான்

பெண் அழகானவளா
ஏன் புகழ்கின்றது
ஆண்மை பெண்ணவளை

கவிதைகள் பொய்களை
விதைக்கின்றது

உண்மையை
அருவடைசெயகிறது

ஆம்

பெண்மை இயற்கையோடு
ஒப்பீடு தான், கவிதை அழகு

என்று தெரிந்தவன் கவிஞன்
பெண் அழகல்ல தனித்து

இலையுதிர் காலம் கூட
மரநிழல் அழகுதான்

மாலை நேரத்து மஞ்சள்
வெயில் அழகுதான்

அலை அலையாய் கரை
தழுவிடும் கடல் அழகுதான்

உச்சி மலையில் ஒழுகிடும்
அருவி அழகுதான்

நெளிந்து வளைந்து ஓடிடும்
நதிநீர் அழகுதான்

கண்ணுக்குள் சிக்காத
தென்றல் அழகுதான்

கார்முகில் கலைத்திடும்
கதிர் ஒளி அழகுதான்

மார்கழி பொழிந்திடும்
பனித்துளி அழகுதான்

கார்த்திகை தூறிடும்
மழைச்சாரலும் அழகுதான்

பச்சை வயல்வெளி
வரப்புகள் அழகுதான்

இயற்க்கை அழகுதான்
அதற்க்கு இணையில்லை
ஒன்றும்தான்

பெண்ணை, இயற்கையோடு
ஒப்பிடாதே

ஆண்மையே! அறிவிழந்து
புகழாதே

போர்த்திடும் ஆடையும்
பூசிடும் முகச்சாயமும்
இல்லையெனில்

ஆநிரை கூட்டம் கூட
அழகுதான்


நட்புக்குள் நாம்



பாலினம் மாற்றிக்கொண்டோம்
வார்த்தைகளில்
டேய் என்றேன் உன்னை
டீ என்றாய் என்னை

பெற்றோர் இட்ட பெயர்
ஓன்று
தோழி வைக்கின்றாய்
தினம் ஓன்று

மாடு ஆடு, கோழி குருவி,
பாம்பு பல்லி,
இத்தனை அழகாய் பெயர்கள்
சூட்டுவதில் நிகரிலார்

பேசிய வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருக்கிறோம்
பேசாத நிமிடங்களில்
நலம் விசாரிக்கின்றோம்

என் வீடு வாசல் தோட்டம்வரை
நலம் விசாரித்தவள்

ஒருவரிச் செய்தியைக்கூட
உள்ளம் தாங்காதவள்
உடன் அனுப்பிவைப்பால்
பிடிக்கவில்லையா என்று

பிடித்த உணவு முதல்
பிடிக்காத உறவுக்காரர்வரை
சொல்லிவிட்டோம்

கவிதை எழுதச்சொல்லி
மகிழ்கின்றாய் உனக்காய்
கவிதை எழுத உயிர்வரை
யோசித்துவிட்டேன்

உன்வார்த்தைகள் போலவே
உன்விருப்பங்களும்
ஐஸ்கிரீம் சாக்லெட்டாய்
இனிக்கின்றது

அன்பு பாராட்டுவதில்
அன்னையை மிஞ்சிவிட்டாய்
அறிவு ஒழுக்கம் புகட்டுவதில்
தந்தையை மிஞ்சிவிட்டாய்

நீ என் தோழியாய்
தோழனாய் நிழலாய்
நினைவாய்
ஓடிக்கொண்டிருக்கின்றாய்
என்னுள்

பிரபுமுருகன்..................

ஒரு கவிதை எழுத உயிர் வடிப்பேன்



பாலைவன நடைபாதையில்
பயணக் களைபபாற்றும்
பசுமை நிழல் நீ

என் தனிமை இருள் போக்கி
உள்ள மகிழ் விளக்கேற்றி
புத்துலகம் காட்டியவள் நீ

என் உறவுகள் தனித்திருக்க
உயிர்வரை வெறுத்து நிற்க
நட்புறவாய் நகம்சதை நீ

நீலக் கடலுக்குள் தத்தளிக்கும்
என் மனதை கட்டுமரமாய்
வந்தெனை கரைசெர்தவள் நீ

ரோஜா இலை மறைவில்
முள்ளாய் அமர்ந்து
உயிர்காப்பவள் நீ

நீ அத்திப்பூ என்பதா இல்லை
அரளிப்பூ என்பதா இல்லை
குறிஞ்சிப்பூ என்பதா
இல்லை இல்லை

நட்பு நட்பு என்று என்றென்றும்
பூத்து குளுங்கவேண்டும்

உனக்காய் ஒரு கவிதை
எழுத உயிர்வடித்து
உயிர்வாழ்வேன் எழுத்துக்களாய்

பிரபுமுருகன்........

மழைவரும் நேரம்



உள்ளம் மகிழ்ந்திடும்
உயிர்சுகம் தந்திடும்
தென்றல் ஏந்திவரும்
மண்வாசம்

இலைதழை ஆடிடும்
இடம்பொருள் தேடிடும்
உயிர்வகை ஆயிரம்

கார்முகில் இறக்கம் கான
கனரிடும் கர்ப்பிணி போல
கதறிடும் இடிமின்னலாய்

அவசரமாய் அக்கறைகொண்டு
தரிசனமாய் கூரையில் நின்று
போர்த்துகிறான் வைகூலங்கள்
கொண்டு

ஒருதுளி மழைத்துளி
உடைத்தெழும் உயிர்த்துளி
வான் நோக்கும் உழவன்
விதைத்து வந்த விதைகளை
நம்பி

முத்துப்போல ஒரு துளி
மழைத்துளி சிதறி விழும்
நிலமகளின் உயிர்த்துளி

பிரபுமுருகன்
.............

பாசமான மீசைக்காரன்



முறுக்கு மீசைமேல்

முகம் பதிக்கும்

என் உயிரே! சிணுங்கி

முகம் சுளிக்கும் கணம்

தாளாது உனக்காய் வழித்து

வழக்கொளிந்தேன்

நீ என் வாழ்க்கையடி கண்ணே!

பிரபுமுருகன்.....

எனக்குள் விளைந்தவை



வெண்மேகம் கருத்தால் தான்
விளை நிலம் பசுமையாகும்

உடம்பு பெருத்து ஆவதென்ன
உழைக்க மனம் வருந்தும்போது

உடனிருந்து பயனில்லை தோழன்
தோள்கொடுக்க மறந்தபோது