Friday, July 9, 2010

ஆநிரை கூட்டம் கூட அழகுதான்

பெண் அழகானவளா
ஏன் புகழ்கின்றது
ஆண்மை பெண்ணவளை

கவிதைகள் பொய்களை
விதைக்கின்றது

உண்மையை
அருவடைசெயகிறது

ஆம்

பெண்மை இயற்கையோடு
ஒப்பீடு தான், கவிதை அழகு

என்று தெரிந்தவன் கவிஞன்
பெண் அழகல்ல தனித்து

இலையுதிர் காலம் கூட
மரநிழல் அழகுதான்

மாலை நேரத்து மஞ்சள்
வெயில் அழகுதான்

அலை அலையாய் கரை
தழுவிடும் கடல் அழகுதான்

உச்சி மலையில் ஒழுகிடும்
அருவி அழகுதான்

நெளிந்து வளைந்து ஓடிடும்
நதிநீர் அழகுதான்

கண்ணுக்குள் சிக்காத
தென்றல் அழகுதான்

கார்முகில் கலைத்திடும்
கதிர் ஒளி அழகுதான்

மார்கழி பொழிந்திடும்
பனித்துளி அழகுதான்

கார்த்திகை தூறிடும்
மழைச்சாரலும் அழகுதான்

பச்சை வயல்வெளி
வரப்புகள் அழகுதான்

இயற்க்கை அழகுதான்
அதற்க்கு இணையில்லை
ஒன்றும்தான்

பெண்ணை, இயற்கையோடு
ஒப்பிடாதே

ஆண்மையே! அறிவிழந்து
புகழாதே

போர்த்திடும் ஆடையும்
பூசிடும் முகச்சாயமும்
இல்லையெனில்

ஆநிரை கூட்டம் கூட
அழகுதான்


No comments:

Post a Comment