
பாலினம் மாற்றிக்கொண்டோம்
வார்த்தைகளில்
டேய் என்றேன் உன்னை
டீ என்றாய் என்னை
பெற்றோர் இட்ட பெயர்
ஓன்று
தோழி வைக்கின்றாய்
தினம் ஓன்று
மாடு ஆடு, கோழி குருவி,
பாம்பு பல்லி,
இத்தனை அழகாய் பெயர்கள்
சூட்டுவதில் நிகரிலார்
பேசிய வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருக்கிறோம்
பேசாத நிமிடங்களில்
நலம் விசாரிக்கின்றோம்
என் வீடு வாசல் தோட்டம்வரை
நலம் விசாரித்தவள்
ஒருவரிச் செய்தியைக்கூட
உள்ளம் தாங்காதவள்
உடன் அனுப்பிவைப்பால்
பிடிக்கவில்லையா என்று
பிடித்த உணவு முதல்
பிடிக்காத உறவுக்காரர்வரை
சொல்லிவிட்டோம்
கவிதை எழுதச்சொல்லி
மகிழ்கின்றாய் உனக்காய்
கவிதை எழுத உயிர்வரை
யோசித்துவிட்டேன்
உன்வார்த்தைகள் போலவே
உன்விருப்பங்களும்
ஐஸ்கிரீம் சாக்லெட்டாய்
இனிக்கின்றது
அன்பு பாராட்டுவதில்
அன்னையை மிஞ்சிவிட்டாய்
அறிவு ஒழுக்கம் புகட்டுவதில்
தந்தையை மிஞ்சிவிட்டாய்
நீ என் தோழியாய்
தோழனாய் நிழலாய்
நினைவாய்
ஓடிக்கொண்டிருக்கின்றாய்
என்னுள்
பிரபுமுருகன்..................
No comments:
Post a Comment