Monday, July 19, 2010

ஜனனித்தது உன்னால்
ஒவ்வொரு வார்த்தையும்
ஜனனித்தது உன்னால்
மொழியாகும்போழுது

உன்னோடு பேசாத
ஒவ்வொரு வார்த்தையும்
கருவறை குழந்தையாகவே
என்னுள் வளர்கின்றது

பாறையின்மேல் பெய்துசெல்லும்
மழைத்துளிபோல பயனற்று
மடிகின்றேன், பசுமையில்லாமல்

உயிர்க்குளிகூட வற்றிப்போனது
உன்பார்வை, உன்வார்த்தை,
உன்வருகை, உதயமில்லாதபோது

பிரபுமுருகன்............

உதிராதவரை
உன் வார்த்தைகள்
உதிராதவரை என்னுள் -
இலையுதிர்காலம்தான்

பிரபுமுருகன்........

Wednesday, July 14, 2010

அவள் உருவம்எப்பொழுதும்
சிரித்துக்கொண்டே
இருப்பவள் அவள்.......

பைத்தியம் போல
என் மனசு........

பிரபுமுருகன்........

கண்ணாடி பிம்பம்


உன்னை உன்னால்
காணமுடியாது என்னுள்
உன்னை கண்டுகொள்

நீ சிரிப்பதை, உன் அழகை,
உன் அழுகையை,
நீ பார்த்ததில்லை என்னுள்
காட்டுகிறேன்

உன்னை என்னுள்
வைக்கதெரிந்தவன்
என்னுயிரை உன்கையில்
வைத்துவிட்டேன்

உன்கை தவறவிடாதே!
உடைந்துபோகும் என் உயிர்,

உடைந்தாலும் உயிர்காட்டும்
என்செல்கலேல்லாம்
உணதுபிம்பமாய்

பிரபுமுருகன்.............

பலாத்காரம்பூக்கள் விரும்பாமலே
தேன் குடிதுச்செல்லும் -
கருவண்டுகள்

பிரபுமுருகன்........

Friday, July 9, 2010

ஆநிரை கூட்டம் கூட அழகுதான்

பெண் அழகானவளா
ஏன் புகழ்கின்றது
ஆண்மை பெண்ணவளை

கவிதைகள் பொய்களை
விதைக்கின்றது

உண்மையை
அருவடைசெயகிறது

ஆம்

பெண்மை இயற்கையோடு
ஒப்பீடு தான், கவிதை அழகு

என்று தெரிந்தவன் கவிஞன்
பெண் அழகல்ல தனித்து

இலையுதிர் காலம் கூட
மரநிழல் அழகுதான்

மாலை நேரத்து மஞ்சள்
வெயில் அழகுதான்

அலை அலையாய் கரை
தழுவிடும் கடல் அழகுதான்

உச்சி மலையில் ஒழுகிடும்
அருவி அழகுதான்

நெளிந்து வளைந்து ஓடிடும்
நதிநீர் அழகுதான்

கண்ணுக்குள் சிக்காத
தென்றல் அழகுதான்

கார்முகில் கலைத்திடும்
கதிர் ஒளி அழகுதான்

மார்கழி பொழிந்திடும்
பனித்துளி அழகுதான்

கார்த்திகை தூறிடும்
மழைச்சாரலும் அழகுதான்

பச்சை வயல்வெளி
வரப்புகள் அழகுதான்

இயற்க்கை அழகுதான்
அதற்க்கு இணையில்லை
ஒன்றும்தான்

பெண்ணை, இயற்கையோடு
ஒப்பிடாதே

ஆண்மையே! அறிவிழந்து
புகழாதே

போர்த்திடும் ஆடையும்
பூசிடும் முகச்சாயமும்
இல்லையெனில்

ஆநிரை கூட்டம் கூட
அழகுதான்


நட்புக்குள் நாம்பாலினம் மாற்றிக்கொண்டோம்
வார்த்தைகளில்
டேய் என்றேன் உன்னை
டீ என்றாய் என்னை

பெற்றோர் இட்ட பெயர்
ஓன்று
தோழி வைக்கின்றாய்
தினம் ஓன்று

மாடு ஆடு, கோழி குருவி,
பாம்பு பல்லி,
இத்தனை அழகாய் பெயர்கள்
சூட்டுவதில் நிகரிலார்

பேசிய வார்த்தைகளை
பேசிக்கொண்டே இருக்கிறோம்
பேசாத நிமிடங்களில்
நலம் விசாரிக்கின்றோம்

என் வீடு வாசல் தோட்டம்வரை
நலம் விசாரித்தவள்

ஒருவரிச் செய்தியைக்கூட
உள்ளம் தாங்காதவள்
உடன் அனுப்பிவைப்பால்
பிடிக்கவில்லையா என்று

பிடித்த உணவு முதல்
பிடிக்காத உறவுக்காரர்வரை
சொல்லிவிட்டோம்

கவிதை எழுதச்சொல்லி
மகிழ்கின்றாய் உனக்காய்
கவிதை எழுத உயிர்வரை
யோசித்துவிட்டேன்

உன்வார்த்தைகள் போலவே
உன்விருப்பங்களும்
ஐஸ்கிரீம் சாக்லெட்டாய்
இனிக்கின்றது

அன்பு பாராட்டுவதில்
அன்னையை மிஞ்சிவிட்டாய்
அறிவு ஒழுக்கம் புகட்டுவதில்
தந்தையை மிஞ்சிவிட்டாய்

நீ என் தோழியாய்
தோழனாய் நிழலாய்
நினைவாய்
ஓடிக்கொண்டிருக்கின்றாய்
என்னுள்

பிரபுமுருகன்..................

ஒரு கவிதை எழுத உயிர் வடிப்பேன்பாலைவன நடைபாதையில்
பயணக் களைபபாற்றும்
பசுமை நிழல் நீ

என் தனிமை இருள் போக்கி
உள்ள மகிழ் விளக்கேற்றி
புத்துலகம் காட்டியவள் நீ

என் உறவுகள் தனித்திருக்க
உயிர்வரை வெறுத்து நிற்க
நட்புறவாய் நகம்சதை நீ

நீலக் கடலுக்குள் தத்தளிக்கும்
என் மனதை கட்டுமரமாய்
வந்தெனை கரைசெர்தவள் நீ

ரோஜா இலை மறைவில்
முள்ளாய் அமர்ந்து
உயிர்காப்பவள் நீ

நீ அத்திப்பூ என்பதா இல்லை
அரளிப்பூ என்பதா இல்லை
குறிஞ்சிப்பூ என்பதா
இல்லை இல்லை

நட்பு நட்பு என்று என்றென்றும்
பூத்து குளுங்கவேண்டும்

உனக்காய் ஒரு கவிதை
எழுத உயிர்வடித்து
உயிர்வாழ்வேன் எழுத்துக்களாய்

பிரபுமுருகன்........

மழைவரும் நேரம்உள்ளம் மகிழ்ந்திடும்
உயிர்சுகம் தந்திடும்
தென்றல் ஏந்திவரும்
மண்வாசம்

இலைதழை ஆடிடும்
இடம்பொருள் தேடிடும்
உயிர்வகை ஆயிரம்

கார்முகில் இறக்கம் கான
கனரிடும் கர்ப்பிணி போல
கதறிடும் இடிமின்னலாய்

அவசரமாய் அக்கறைகொண்டு
தரிசனமாய் கூரையில் நின்று
போர்த்துகிறான் வைகூலங்கள்
கொண்டு

ஒருதுளி மழைத்துளி
உடைத்தெழும் உயிர்த்துளி
வான் நோக்கும் உழவன்
விதைத்து வந்த விதைகளை
நம்பி

முத்துப்போல ஒரு துளி
மழைத்துளி சிதறி விழும்
நிலமகளின் உயிர்த்துளி

பிரபுமுருகன்
.............

பாசமான மீசைக்காரன்முறுக்கு மீசைமேல்

முகம் பதிக்கும்

என் உயிரே! சிணுங்கி

முகம் சுளிக்கும் கணம்

தாளாது உனக்காய் வழித்து

வழக்கொளிந்தேன்

நீ என் வாழ்க்கையடி கண்ணே!

பிரபுமுருகன்.....

எனக்குள் விளைந்தவைவெண்மேகம் கருத்தால் தான்
விளை நிலம் பசுமையாகும்

உடம்பு பெருத்து ஆவதென்ன
உழைக்க மனம் வருந்தும்போது

உடனிருந்து பயனில்லை தோழன்
தோள்கொடுக்க மறந்தபோது

Monday, June 28, 2010

நாவடக்கம்

எலும்பில்லாத நாக்கு
எதையும் சொல்லும்
எப்படியும் சொல்லும்

உண்மை சொல்லிப்பார்
உன் உள்ளம் மகிழும்

போய் கூரும்முன்னே
நாவே உலரும்

வார்த்தைகளின் உருவங்களாய்
நாவின் நளினம்

சுவைகளின் நிறங்களாய்
நாவின் பயணம்

நாவு நீலக் கூடாதென்பதே
அடக்கமாய் உள்ளமர்வு

நாவு அடக்கம் பெற்றால்
நல்லொழுக்கம் உயர்வு பெரும்

நல்லொழுக்கமே நற்ப்பெயரை
விதைக்கும்

வள்ளுவன் பாடிவைத்த வைர
வரிகளாய்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Friday, June 25, 2010

போர்க்களம்போர்க்களம்
என்னவளின் இதழால் மலரினுள்

பாதஅடியினால் மண்துகள்களுக்குள்

கூந்தளினால் பட்டுபூச்சிகளுகுள்

அவள்வாசனையால் பூக்களுக்குள்

இடைஅழகால் அன்னபறவைகுள்

உடல்நிறதினால் செர்ரிபழத்தினுள்

பார்வைகளால் என்கண்களுக்குள்

என்னவளினால் இதயத்தினுள் மூண்டது
=====>> போர்

Monday, June 21, 2010

ஹைகூ கவிதை

தன் உணவிற்காக (சுயநலம்)
பாவம் கர்ப்பிணி கழுத்தில் கூட கவட்டை
குழை தள்ளிய வாழை மரம்நாங்கள் தொட்டாலும் சுருங்குகிறாய்
காற்று பட்டாலும் சுருங்குகிறாய்
நாங்கள் என்ன தீண்டதகாதவர்களா ?
தொட்டாசுருங்கி செடி

Friday, June 18, 2010

மனைவி
பரந்துவிரிந்த உலகத்தில் உள்ள
சூரியன் நிலவுபோல வாழும்

மன சிந்தனையில் உள்ள
பசுமையான நினைவில் வாழும்

நேசத்திற்கு முகவரியாய் உள்ள
பாசத்திற்கு உரியவளாய் வாழும்

கண் கருவிழிகளில் உள்ள
விழித்திரையின் ஒளியாய் வாழும்


உன்னதமலர் தான் என் ----- மனைவி

Friday, June 11, 2010

அதிசய மலர்ரோஜாவின்
இரண்டு இதழ்
புன்னகையில் மலர்ந்து
வார்த்தைகளில்
மனம்வீசுகிறாள்.

பிரபுமுருகன்........

Thursday, June 10, 2010

மாண்புமிகு மனிதன்


உருவமில்லாமல் உறங்கியது
கல்லுக்குள் தெய்வம்,
உளி கொண்டு உறக்கம்
கலைத்து, விழி கொண்டு
வீரம் புகட்டி, பெயர்கொண்டு
பெருமை தந்து, நிலையென்று
நிறுத்திவைத்தான்,
காவல்தெய்வமாய்.

பிரபுமுருகன்.........

வழியெங்கும் விழி சிந்தி


சின்ன சின்ன நீர்த் திவலையை

பூவிதழ் சிந்தும் பனித்துளியை

பருகிக் களிக்கும் கதிரவன் விழி-போல

பெண்ணே! உன் இதழ் சிந்தும்

புன்னகை பருக வழியெங்கும் விழி

வைத்து நிற்கிறேன்.

பிரபுமுருகன்.............

உன்னை தேடி தேடி


இரவும் பகலும்
உனை தேடி தேடி
என் இதய ஓட்டம்
நின்றதடிப் பெண்ணே!

பிரபுமுருகன்......

எச்சப்படுதுவது யார்


சிலைமீது எச்சமிடும்
பறவைக்கு தெரிவதில்லை
தேசப்பற்று தலைவரென்று

சாதியின் பெயரைச்சொல்லி
எச்சில் படுத்தும் மனிதர்க்கூட்டம்
தெரிந்தே தேசம் போற்றும்
தலைவரென்று

பிரபுமுருகன்........

குடிமகனே குடியாதேகுடி தினம் தண்ணீரை குடி
தூய்மையாகும் சிறுநீரக பணி

வியர்வைத்துளிகளை சிந்தி
குடிக்கின்றாய் கொஞ்சம் சிந்தி

மது குடித்தால் உடல் கெடும்
தினம் குடித்தால் உயிர் விடும்

மதுவில் இருப்பது எரிசாராயம்
குடல் எரிப்பதே அதன் தோராயம்

அன்புக்காய் கற்றுக்கொண்டால்
அடிமையாய் சிக்கிக்கொல்வாய்

தள்ளாடி தள்ளாடி தடுமாறி நீ வீடுவர
உள்ளக்காயங்கலோடு உன்மனைவி

மது அருந்திச் செல்லும் குவளையை
மகன் கழுவிச்சுவைதிடும் திவலைகள்

நீ குடிமகன் என்பதால் குடிக்கின்றாயோ
குடியானவள் குடித்தால் பெண்ணாகுமோ

எதை மறக்க நீ குடிக்கின்றாய் மது, மாது
உன்னை நினைந்தே கண்ணீர் வடிக்கின்றாள்

வீதியில் விழுந்துகிடப்பது நீ மட்டுமில்லை
உன்குடும்பத்தொடு தலைநிமிர முடியாமல்

பிரபுமுருகன்............

கோபம்

உனது எனது
கண்களை மட்டும்
மறைக்கவில்லை
நம் கால்களையும்
வாரிக்கொண்டது

உனக்காய் எனக்காய்
எல்லாம் கொடுக்க
நினைத்த மனசு ஏனோ
விட்டுக்கொடுக்க
மறந்தது

எங்கிருந்தது கோபம்
உன்னோடு சிரிக்க
உன்னோடு பழக
உன்னோடு வாழ
நினைக்கும்பொழுது

கோபம் எனக்காய் கொடுத்தது
உன்பிரிவையும் - வெறுமை
நினைப்பையும்

கோபத்தால்
தினம் வதைபடும் மனம்


பிரபுமுருகன்................

எந்த தொடர்பும் இல்லை
என் கண்களும் உன் கண்களும்
மோதவில்லை

என்சுவசமும் உன்சுவசமும்
மெய் தீண்டவில்லை

என் கைகளும் உன்கைகளும்
பற்றிக்கொள்ளவில்லை

என் உடலும் உன் உடலும்
சந்திக்கவில்லை

என் இரவில் நீ கனவில்
வருவதில்லை

எந்த தொடர்பும் இல்லாமல்
தட்டச்சில் என் இதயம்
தவிக்கவிடுகின்றாய்

எழுத்துக்களில் உண்முகங்களை
பதித்துவைத்து

தீண்டலாய் திருடலாய்
அனுப்பிவைத்தாய்.

பிரபுமுருகன்.........

Monday, June 7, 2010

சிரம் உன்மடியில்


சிறகடித்து திரிந்தவனை உன்

சிந்தையில் ஆழ்த்திவிட்டு

சிற்ப்பங்கள் வடித்தவனை

சிலையாய் நிற்க வைத்து

சிர்ப்பிக்குள் முத்தை போல ௦

சித்தத்தில் நுழைந்தவளே

சிகரத்தில் ஏற்ற என்னை

சீர்துக்கி வளர்த்தவளே

சின்ன இதழ் பேச்சால் என்

சிரம் உன்மடியில்..................

Thursday, May 13, 2010

ஏன்டா என்னை கொள்கிறாய்ஏன்டா என்னை கொள்கிறாய்

மலரின் மொட்டை மெல்ல மோதி
திறக்கும் தென்றலா நீ
மலர்ந்த மலரை வட்டமிடும்
வண்ணத்துப்பூச்சியா நீ

ஏன்டா என்னை கொள்கிறாய்

தனிமையிலே என் நெஞ்சம்
வருடிவிடும் தென்றலா நீ
பாறையிலே சுரக்கும் நீரூற்றா நீ
எனக்குள்ளே சுரந்து வழிகிராயே

ஏன்டா என்னை கொள்கிறாய்

குறும்பு பார்வை அரும்பு மீசைகாட்டி
உன்னையே நினைக்கச்செய்கிராயே நீ
சிறு சிறு பொய்களை சொல்லி
என் உள்ளக்கதவினை திறக்கச்செயகிறாய் நீ

ஏன்டா என்னை கொள்கிறாய்

காற்றின் விசையோடு போராடும்
இலைபோல
உன்பார்வை கணையோடு போராடும்
என் உயிர்போல
உன்கவிதை இன்னும் என்னை
கொள்ளாமல் கொல்லுதடி

பிரபுமுருகன்.......

காதலின் தீர்ப்புஎன் காதலின் தீர்ப்பை
கண்ணுக்கு மையிட்டு
மௌனத்தில் எழுதுகிறாள்

பிரபுமுருகன்............

என்னுள் கலந்தால்மான் போல மீன் போல துள்ளித்திரிந்தால்

மழை போல பணி போல என்னுள் விழுந்தால்

விதை போல மரம் போல நெஞ்சில் முளைத்தால்

பூப்போல புதுமழைபோல என்னுள் மனத்தால்

தேன்போல திணை போல நெஞ்சில் இனித்தால்

கனல் போல உலை போல நெஞ்சில் கொதித்தால்

ஊன்போல உயிர்போல என்னுள் கலந்தால்

பிரபுமுருகன்..............

போராட்டம்மரத்தின் கிளையில்
இலையின் பிடியாட்டம்

கழுகின் பிடியில்
பாம்பின் உயிரோட்டம்

மெழுகின் திரியில்
வெளிச்சத்தின் நிழலாட்டம்

பிரபுமுருகன்........

மெழுகுவர்த்தி நாம்
நிகழ் காலத்தை தொலைத்துவிட்டு
எதிர்காலத்தை தேடுகின்றோம்

பாச வலைகளை முதுகில் சுமந்து ஆசை
வலைகளுக்குள் அகப்பட்டுவிட்டோம்

அன்னை தந்தை தம்பி தங்கை முகங்களை
படங்களை பார்த்து புன்னகை புரிகிறோம்

புது புது உறவுகள் முளைத்துவிட்டன
கார்மேகமாய் மனம் கருத்துபோனத்தில்

தந்தை கொஞ்சும் மீசை முத்தம்
அந்த பிஞ்சு முகத்தில் பதியவில்லை
அந்த செல்போனுக்கு புரிந்தது

பல வருடங்கள் கழித்துவரும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் அன்னை உள்ளம்

மாமா என்று சொல்லும் மகனை பார்த்து
கண்ணீர்விடும் மனைவியின் உள்ளம்

உறவுகள் கூடி புதுமையாய் பார்க்கும் நம்மை
மாற்றம் நம் உடம்பில் மட்டும்மல்ல
நம் வாழ்க்கையிலும்.

பிரபுமுருகன்............

தாய் இவள்
கணவனோடு கைச்சண்டை
கண்ணீரோடு கைக்குழந்தை

அழுகின்றாள் குழந்தை
தாயின் கண்ணீரை கண்டுதான்
அலுதவலாய்

சிறிது ஒப்பந்த போர்நிறுத்தம்
குழந்தையின் தலையீட்டால்

கண்ணீரை தான் துடைத்து
கணவனின் கால் பட்ட மார்பை
குழந்தையின் வாய் பட்டு சுரக்கின்றாள்
தாய் பாலையும், கண்ணீரையும்

பிரபுமுருகன்..............