
காய்ந்து போன நிலத்தின்மீது
சின்ன சின்ன மழைத்துளியாய்
என் சந்தோஷம்....
வியர்வை துளிகளில் விளைந்துவிட்ட
விலைபோகாத வெள்ளைமுதுக்கள்
என் உழைப்பு.....
வெட்டி எரிந்தாலும் தலை நீட்டும்
வாழைக்குருத்தாக தளிர்விடுகிறது
ஆசை, கனவுகள்........
தவழ்ந்தபோதும் நடந்தபோதும்
என்னைவிட்டு பிரியாமல்
தொடர்ந்துவரும் தோழனாய் நிழல்
துன்பங்கள்...
பிரபுமுருகன்............
mika arumaiyana kavithai thozhare vaazhthukkal
ReplyDelete