
வான் மழை போழியச்செய்தேன்
வானம்பாடிகள் உறங்கச்செய்தேன்
இழப்பார நிழலைத் தந்தேன்
உயிர்வாழ காற்றைத் தந்தேன்
என் நிழல் கூட இன்று இல்லை
இலையுதிர் காலம் என்பதால்
பணம் இருந்தது பாசம் தெரிந்தது
உடனிருந்தது உண்டு களித்தது
நட்பு வளர்ந்தது நகமோடு சதையென்றது
பணம் குறைந்தது பாசம் வெளுத்தது
நட்பு நரைத்தது நாடகம் முடிந்தது
உச்சிவேயிலென்றால் நிழல்கூட வருவதில்லை
இது என் இலையுதிர்காலம்தான்
பிரபுமுருகன்................
arumai nanba mika arumai prabu
ReplyDelete