
துளித்துளியாய் மழை
பெய்தாலும்
துளிகளெல்லாம் ஒன்றாய்
தேடுவது ஒரு அடைக்கலம்
குளமாக ஏரியாக
அருவியாக ஆறாக
மழைத்துளி நிறைந்தாலும்
கடலில் சங்கமம்
ஆனபிறகே அதன்
தேடல் முடிவடைகிறது
தனித்தனி மனிதானாய்
பிறந்தாலும் அன்பைத்தேடி
மனிதமனம் நாடிச்செல்கிறது
தாயக, நட்பாக
காதலாக, மனைவியாக
அன்போடு கலந்தாலும்
பக்த்திக்கடலில் கலந்தபின்னே
கடவுளின் ஆன்மாவோடு
சங்கமமாகின்றது
பிரபுமுருகன்.................
No comments:
Post a Comment